2025 மே 03, சனிக்கிழமை

புத்தெழில் பத்திரிகையின் 10ஆவது ஆண்டு நிறைவு வைபவம்

Thipaan   / 2015 மே 10 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தினால் வெளியிடப்படும் புத்தெழில் பத்திரிகையின் பத்தாவது ஆண்டு நிறைவு வைபவம் புத்தளம் ஸாகிரா தேசிய கல்லூரியின் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் சனிக்கிழமை (09) மாலை இடம்பெற்றது.

புத்தெழில் பத்திரிகையின் ஆசிரியர் அஸ்மி கமர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கி இருந்தது.

மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளோடு விஷேட விவாத அரங்கும் இடம்பெற்றன.

விஷேட உரைகளை கலாபூசணம் எஸ்.எஸ்.எம். ரபீக், ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் வடமேல் மற்றும் வட மத்திய மாகாண விற்பனை முகாமையாளர் எம்.எச்.எம். சகீன் ஆகியோர் நிகழ்த்தினர்.

புத்தெழில் பத்திரிகையின் ஆலோசகர் ஜே.இசட்.ஏ. நமாஸ்,  புத்தெழில் பத்திரிகையின் வளர்ச்சி, அது கடந்து வந்த பாதை பற்றி விளக்கக்காட்சி மூலம் தெளிவுபடுத்தினார்.

புத்தெழில் பத்திரிகையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயற்பட்டவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

புத்தெழில் பத்திரிகையின் ஆலோசகர் ஜே.இசட்.ஏ. நமாஸ், சிறந்த புகைப்படப்பிடிப்பாளர் என்.எம். முஸ்பிக் ஆகியோருக்கு புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.அசோக் பெரேரா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 

இறுதி நிகழ்வாக நடைபெற்ற விவாத அரங்கினை புத்தளம் நகர முதல்வரும்  கவிஞருமான கே.ஏ. பாயிஸ் தலைமை தாங்கி நடாத்தினார். 

' ஊடகங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் சமூகத்தை வழிநடாத்துகிறதா? இல்லையா? ' எனும் தலைப்புக்கள் இந்த விவாத போட்டிக்கு வழங்கப்பட்டிருந்தன.

வழிநடாத்துகிறது எனும் தலைப்பில் கவிஞரும் புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் அதிபருமான எஸ். நாகராஜா, சட்டத்தரணி ஏ.எம். கமர்தீன், கவிஞர் எம்.எஸ்.எம். அப்பாஸ் ஆகியோரும் வழிநாடாத்தவில்லை எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர், கலாபூசணம் எஸ்.எஸ்.எம். ரபீக், சட்டத்தரணி எம்.பீ.எம். இப்திகார், ஆசிரியர் எம்.ஆர். ஹக்கீம் ஆகியோரும் வாதிட்டனர்.

இந்நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ்,  வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். நவவி, முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். அபூபக்கர், முன்னாள் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம். மு{ஹஸி, புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம். ஜனாப், ஒமைக்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நயீம் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X