2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

அமரர் ராஜ ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்த குறும்படப் போட்டி

Sudharshini   / 2015 மே 11 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்சரம் அமைப்பின் ஏற்பாட்டில் முற்போக்கு இலக்கிய முன்னோடியும் எழுத்தாளரும் இதழியலாளருமான ராஜ ஸ்ரீகாந்தனின் ஞாபகார்த்தமாக குறும்படப் போட்டி நடத்தப்படவுள்ளது.  

மானுட சமத்துவம், சமூக ஒருமைப்பாடு முதலான உயரிய விழுமியங்களின்பால் உண்மையான கரிசனை கொண்டு, தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தவர் ராஜ ஸ்ரீகாந்தன். கூர்ந்தாய்ந்து தெளிந்த தனது சிந்தனைகளை சமூகத்திடம் கொண்டு செல்வதற்கான கருவிகளாக எழுத்தையும் தனது செயற்பாடுகளையும் அமைத்துக் கொண்டவர்.

தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் கலை, இலக்கியச் செயற்பாடுகளை ஊக்குவித்து, அவர் முன்னெடுத்த முயற்சிகள் பலராலும் விதந்துரைக்கப்படுபவை. அவரது அடிச்சுவட்டை ஒட்டி இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் விதிமுறைகள்,
-குறும்படங்கள் 3 நிமிடங்களுக்கு குறையாமலும் 15 நிமிடங்களுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

-இலங்கையின் எந்தப்பாகத்திலிருந்தும் எவ்வயதினரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

-2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதிக்கு பின்னதாகத் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் மாத்திரமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

-படைப்பின் கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம். சமூக அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்திலோ முரண்பாடுகளை வளர்க்கக் கூடியவையாகவோ இருத்தலாகாது.

-விதிமுறைகளை மீறி அமையும் குறும்படங்கள் போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்.

இப்போட்டியில் பங்குப்பற்ற விரும்புபவர்கள், ராகபவனம், கரணவாய் கிழக்கு கரவெட்டி எனும் விலாசத்துக்கு குறும்படங்களை அனுப்பி வைக்க முடியும் என ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .