2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘இராவண இராஜ்ஜியம்’

Kogilavani   / 2017 ஜூலை 11 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாசூரி திவ்யா சுஜேனால் இயலாக்கம் செய்யப்பட்டு, நடன நெறியாள்கை அமைக்கப்பட்டு  பாராட்டுப்பெற்ற படைப்பான தசகீரீவன் எனும் ‘இராவண இராஜ்ஜியம்’ நாட்டிய நாடகம், கொ/ மகளிர் கல்லூரி மாணவிகளால், அண்மையில் அரங்கேற்றப்பட்டது.

கொழும்பு மகளிர் கல்லூரியின் 85ஆவது அகவையை ஒட்டி நடைபெற்ற இந்நிகழ்வின்போதே, மேற்படி நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.

மாயவரம் டி.விஸ்வநாதன், கோவை பிரவீன், எஸ்.திபாகரன், ஆர்.பிரகலாதன் ஆகிய அணிசேர் கலைஞர்களுடன், நட்டுவாங்கம் வழங்கி நல்லதொரு இசை அனுபவத்தை  திவ்யா சுஜேன் வழங்கினார்.

இந்நாட்டிய நாடகமானது, பத்து காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்தது. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் இராவணனுக்கும் பத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தியிருந்தது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்நாட்டிய நாடகமானது, பார்வையாளரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம். (படப்பிடிப்பு: விஷான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .