2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண இலக்கிய விழா - 2017

Kogilavani   / 2017 ஏப்ரல் 21 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை நடத்தவுள்ளது. இதனை முன்னிட்டு, பல்வேறு தலைப்புகளின் கீழ், போட்டிகளை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.   

இதுத் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

இலக்கிய நூல் விருது வழங்கல்  

கிழக்கு மாகாண எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தமது நூல்களைச் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2016.01.01 திகதி முதல் 2016.12.31 வரையிலான காலப்பகுதியில், முதலாம் பதிப்பாக வெளியிடப்பட்ட கிழக்கு மாகாண எழுத்தாளர்களுடைய நூல்களின் தலா நான்கு (04) பிரதிகளை, தேர்வுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.  

‘வித்தகர் விருது’ வழங்கல்  

கிழக்கு மாகாணத்தின் இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள், துறைசார் வல்லுநர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர், 01.01.2017ஆம் திகதியன்று அறுபது(60) வயதை பூர்த்தியடைந்தவராக இருத்தல்வேண்டும்.  

இளங்கலைஞர் பாராட்டு  

கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இளங்கலைஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், துறைசார் வல்லுநர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.  

நூல் வெளியீடு - 2017  

புலமைத்துவம் சார் படைப்புகள், பிரதேச மற்றும் கலை தொடர்பான ஆய்வுசார் படைப்புகள், அறிவியலும் தொழில்நுட்பமும், பாரம்பரிய, நாட்டார் கலை வடிவங்களின் ஆவணத் தொகுப்பு, வரலாறு, நாடகம், காவியம், சிறுவர் இலக்கியம், சிறுகதை, நாவல், கவிதை போன்றவற்றை கையெழுத்துப்பிரதிகளாக வைத்திருக்கும் படைப்பாளிகள் விண்ணப்பிக்கலாம்.  

தமது ஆக்கங்களை, 120 பக்கங்களுக்குள் (A4 தாள்) அமையக்கூடியவாறு, கணினித் தட்டச்சு செய்து, வன்பிரதியையும் (Hardcopy) மேலும் அதன் மென்பிரதியை (Soft copy) குறுந்தகடு (CD) மூலமும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். அச்சுக்குரிய பிரதிகள், தேர்வு மூலம் தெரிவு செய்யப்படும்  
 

நூல் கொள்வனவு - 2017  

1.01.2016 தொடக்கம் 11.03.2017 வரை, கிழக்கு மாகாண படைப்பாளிகளினால் வெளியீடு செய்யப்பட்ட நூல்களை, எமது திணைக்களத்தின் நூல் கொள்வனவு திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்ய விரும்பினால், விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நூற்பிரதிகளுடன் அனுப்பி வைக்கலாம்.  

மேற்குறித்த விருதுகள், போட்டிகளுக்குரிய விண்ணப்பப் படிவங்களை, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் பிரதேச செயலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். http://www.ep.gov.lk எனும் வலைத்தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.   மேலதிக தகவலுக்கு, பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தருடன் அல்லது பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 026-2220036 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X