Niroshini / 2016 ஜூலை 04 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்
சவூதி அரேபியாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் கவித்தென்றல் ஏரூர் எழுதிய 'இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா வன்னியில் அமைந்துள்ள இனிய வாழ்வு இல்லத்தில் கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் கம்பீரக்குரலோன் சி.நாகேந்திரராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ் மொழி வாழ்த்தை வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவிகள் வழங்கினர். வரவேற்பு உரையை வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய ஆசிரியர் சுதர்சன் வழங்கினார். ஆசியுரையினை சிவஸ்ரீ நவரத்தினம் வழங்கினார்.
வரவேற்பு நடனத்தினை வவுனியா சிதம்பரேஸ்வரா நடனாலயப் பள்ளி இயக்குநர் செந்தூர்ச்செல்வன் வழங்கினார். வாழ்த்துரையை கவிதாயினி முல்லை றிசானா வழங்கினார். அறிமுகவுரையினை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நிகழ்த்தினார்.
நூலினை இனிய வாழ்வுச் இல்லச் சிறார்கள் வெளியிட்டு வைக்க, நூலின் முதற்பிரதியினை வாண வைத்திய நிலைய ஆயுர்வேத வைத்தியர் சிவசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார். வெளியீட்டு நிகழ்ச்சிகளை 'முல்லை ஸ்வரம்' இசைக்குழு இயக்குநர் முல்லை யோகேஸ் தொகுத்து வழங்கினார்.
வெளியீட்டு விழாவில் கிடைக்கப்பெற்ற நிதியினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், இனிய வாழ்வு இல்ல முகாமையாளர் திருச்செல்வத்திடம் வழங்கி வைத்தார். வெளியீட்டுரையை கலாபூசனம் நடராஜா இராமநாதன் வழங்கினார்.
தொடர்ந்து, கவிஞர் வே.முல்லைத்தீபன் தலைமையில் 'சிரிக்க சிரிக்க சிரிப்பு வரும்' எனும் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்கள் காவலூர் அகிலன், கிளியூர் ரமணன், புங்குடுதீவு தயான் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் இனிய வாழ்வு இல்ல மாணவிகளின் நடனம் மற்றும் இனிய வாழ்வு இல்ல மாணவி தமிழினி பாடல் என்பனவும் இடம்பெற்றன.
16 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
04 Nov 2025