2025 மே 01, வியாழக்கிழமை

சுவாமி விபுலானந்தர் விழா

Sudharshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காயத்திரி விக்கினேஸ்வரன்

அகில இந்து மாமான்றம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து நடத்திய சுவாமி விபுலாநந்தர் விழா, கடந்த 17ஆம் திகதி நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் செஞ்சொல்செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.

ஆசியுரையை நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் அகில இலங்கை இந்துமன்ற ஆலோசகர் வேதபாராயணம் சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வரக்குருக்களும் ஆற்றினர்.

தலைமையுரையை செஞ்சொல்செல்வர் ஆறுதிருமுருகளும் ஆரம்ப உரையை கந்தையா நீலகண்டனும் நிகழ்த்தினர்.

சிறப்புப் பேருரைகளில், 'உள்ளக்கமலம்' என்னும் விடயத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனும், 'அன்பெனப்படுவது' என்னும் விடயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜாவும், 'சைவ சித்தாந்த நோக்கில் விபுலானந்தர் சிந்தனைகள்' என்னும் விடயத்தில் சைவப்புலவர் திருமதி சிவானந்தNஐhதி ஞானசூரியமும், 'இளம் சந்ததியினரின் நல்வாழ்வுக்கு விபுலானந்தரின் அறிவுரைகள்' என்னும் விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்; பேரவையின் செயலாளர் சா.மதிசுதனும்  உரை நிகழ்த்தினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .