Editorial / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
கடந்தாண்டு வெளிவந்த சிறுகதை நூல்களில் சிறந்த நூலாகத் தெரிவுசெய்யப்பட்ட வி.மைக்கல் கொலினின் “பரசுராமபூமி" நூல், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் நாளை (23) நடைபெறவுள்ள தமிழ் இலக்கிய விழா - 2019 இல் கிழக்கு மாகாண சாகித்திய விருது பெறுகின்றது.
திருகோணமலையை பிறப்பிடமாகவும் தற்போது மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் மைக்கல் கொலின் திருகோணமலையில் இருந்து வெளிவந்த தாகம் - கலை இலக்கிய சஞ்சிகையிலும் மட்டக்களப்பு தினக்கதிர் வாரப்பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தவர்.
கடந்த ஏழு வருடங்களாக மட்டக்களப்பிலிருந்து மகுடம் என்ற கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றார்.
இலங்கைத் தமிழர் பாரம்பரியம், நவீன கலைகளுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, இந்து கலாசார அமைச்சு நடத்திய விருது வழங்கும் விழாவில் கலைச்சுடர் விருது வழங்கி அண்மையில் கௌரவிக்கப்பட்டார்.

23 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
59 minute ago
1 hours ago