Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஜூன் 12 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
வைத்தியக் கலாநிதி அருமைநாதன் சதீஸ்குமாரின் "சம்பூர் இடப்பெயர்வும் மீள்குடியேற்றமும்" நூல் வெளியீடு, ஞாயிற்றுக்கிழமை (11) மாலை சம்பூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நூலானது, சம்பூர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் வெளியக பழைய மாணவர் சங்கத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு வைத்தார்.
நூலின் முதற்பிரதியை சம்பூர் மீள்குடியேற்றத்துக்காக உழைத்த சி.அரவிந்தன் பெற்றுக்கொண்டார்.
கௌரவ அதிதிகளாக முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஷ்வரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்.சற்சிவானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது, 2006 சம்பூர் இடப்பெயர்வின்போது உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செழுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago