Niroshini / 2016 ஜூலை 04 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூலின் அறிமுகவிழா கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டக் கூட்டுறவுச் சபையின் தலைவர் அமரசிங்கம் கேதீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் உமாசங்கர் மகேசன் நிகழ்த்தினார்.
வாழ்த்துரைகளை கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை இறைபிள்ளை, கிளிநொச்சி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிறேமா மதுரநாயகம் ஆகியோரும், நூல் அறிமுக உரையை உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் திருமதி மணிமேகலையும் நிகழ்த்தினர்.
நூலின் முதல் பிரதியை கிருபா லேணர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் பெற்றார். நூல் நயப்புரையை கிளிநொச்சி காவேரி கலாமன்ற இயக்குநர் வண.ரி.எஸ்,ஜோசுவா நிகழ்த்த, ஏற்புரையை நூலாசிரியர் வேதநாயகம் தபேந்திரன் நிகழ்த்தினார்.




7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025