2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சர்வோதய இயக்கத்தின் தலைவருக்கு ஜப்பானின் அதி விசேட விருது

Super User   / 2012 நவம்பர் 05 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வோதய இயகத்தின் ஸ்தபாகரும் தலைவருமான டாக்டர் ஏ.ரி.ஆரியரத்னவுக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் அதி விசேட கௌரவிப்புக்களில் ஒன்றான உதய சூரியன் தங்க கதிரி ஓடர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர மக்கள் பரிமாற்றம் மூலம் உறவுகளை மேம்படுத்த டாக்டர் ஆரியரத்ன ஆற்றியுள்ள பணிகளை கருத்தில் கொண்டே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமூக பொருளாதார அபிவித்தி திட்டங்களை ஜப்பான் மேற்கொள்ள ஒத்துழைபபாக டாக்டர் ஏ.ரி.ஆரியரத்ன செயற்பட்டதுடன் ஜப்பான் வெளிநாட்டு தொண்டர் அமைப்பின் ஊடாக 870க்கு மேற்பட்ட ஜப்பானிய தொண்டர்களின் சேவையை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதிலும் முன் நின்று உழைத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் டிசம்பர் மாத முற்பகுதியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றின் போது டாக்டர் ஏ.ரி.ஆரியரத்னவுக்கு இந்த விருது உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளது. 

ஜப்பானிற்கும் வெளிநாடுகளுக்கும் இடையில் பரஸ்பர மக்கள் பரிமாற்றம் மூலம் உறவுகளை மேம்படுத்தும் வெளிநாட்டவர்களுக்கு ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதே உதய சூரியன் தங்க கதிரி ஓடர் விருதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .