2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் காலமானார்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


பன்மொழிப்புலவர் சங்கச்சான்றோன், கலாபூஷணம், தமிழ்மணி த. கனகரத்தினம் அவர்கள் தனது எண்பத்தாறாவது வயதில் இறையடி சேர்ந்தார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், சிங்களம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்.

பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராகவும் இலங்கைக் கல்விச் சேவையில் தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுப் பகுதித் தலைவராயும் கொழும்புப் பல்கலைக்கழக ஊடகவியல்துறை வருகை விரிவுரையாளராகவும் பண்டாரநாயக்கா சர்வதேச கற்கை மத்திய நிலையம், கொத்தலாவலை பாதுகாப்புக் கல்விக்கழகம், பல்கலைக்கழகம் முதலான பல உயர்கல்வி நிலையங்களின் விரிவுரையாளராயும் திகழ்ந்தவர்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கப்புலவராய் விளங்கியவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் நூற்றுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துப் பங்கு பற்றிப்புகழ்பெற்றுள்ளார்.

இவரது இழப்புத்தமிழ் அறிஞர் உலகினர்க்குப் பேரிழப்பாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X