2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

புகழ்பெற்ற பாடகர் வின்சன்ட் டீ போல் பீரிஸ் காலமானார்

Kogilavani   / 2014 ஜூலை 23 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புகழ்பெற்ற பாடகரான காலாபூஷணம் வின்சன்ட் டீ போல் பீரிஸ் தனது 92 ஆவது வயதில் நேற்று(23) கொழும்பில் காலமனார்.

'சிறிபாத சமனல கந்தே பெனி' என்ற சிங்கள மொழி பாடலின் புகழுக்குறிய இவர், 1922 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார்.

கொட்டாஞ்சேனை, சென். பெனடிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், முகத்துவாரம், டீ லா சாலே கல்லூரியில் இசையை பொழுதுபோக்காக பயின்றார்.

கடந்த 1940 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி தனது முதல் இசைமேடையில் காலடி பதித்த இவர், 'பைசிக்களே பைசிக்களே', 'தும்ரிய லங்காவே', 'ஷோபமா மீ உதே', 'மிஹிந்தலை பொசன் தினே', 'அஷோகமாலா', 'ரிக்சா காரயா' உட்பட பல சிங்கள மொழி பாடல்களை பாடியுள்ளார்.

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் ஆகியோருடன் இணைந்து பிரமாண்டமான இசைநிகழ்வொன்றை நடத்தியிருந்தார். அதன்பின்பு, இவர் பற்றிய எந்த அறிதல்களும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இவர்  நேற்று செவ்வாய்க்கிழமை(23) உடல்நலக் குறைவால்  காலமாகியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .