Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஏப்ரல் 21 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது .
பிறைந்துறைச்சேனை தாஜ்மஹால் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான சுலைமா லெப்பை ஜமால்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் , இன்னொருவரிடம் கடனாக கொடுத்த மூவாயிரம் ரூபாய் பணத்தை கேட்டபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தக் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது .
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சனிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .
மேலும் இது தொடர்பில் சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago