Freelancer / 2023 ஜனவரி 03 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம் அஸ்லம்
புதுவருட விசேட முற்பணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள 4,000 ரூபாயைக் கொண்டு என்னதான் செய்ய முடியும் என்று இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆகையால், அரசாங்க ஊழியர்களுக்கான புதுவருட விசேட முற்பண தொகையை, தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு 10,000 ரூபாயாக அதிகரிக்குமாறு அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நிதியமைச்சு, பொது நிர்வாக அமைச்சு என்பவற்றின் செயலாளர்களுக்கு அவசர மகஜர்களை அனுப்பி வைத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் நேற்று (02) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; அரச ஊழியர்களுக்கு புது வருட விசேட முற்பணம் வழங்கப்படுவதன் பிரதான நோக்கம், புது வருடத்தில் அரச ஊழியர்களது பிள்ளைகளுக்குரிய பாடசாலை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாகும்.
ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ள 4,000 ரூபாயைக் கொண்டு, தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதையும் செய்யமுடியாது. அதிலும் அப்பியாசக் கொப்பிகள் உட்பட பாடசாலை உபகரணங்களின் விலைகள் பன்மடங்காக அதிகரித்துள்ள சூழ்நிலையில், இத்தொகையைக் கொண்டு ஒரு பிள்ளையின் தேவையைக் கூட முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது.
எனவே, இத்தொகையை ஆகக்குறைந்தது 10,000 ரூபாய் வரை அதிகரிப்பதன் மூலமே, தமது பிள்ளைகளின் தேவைகளை அரச சேவை ஊழியர்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்.
29 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago