Princiya Dixci / 2022 ஜூலை 24 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை நிர்வாகத்துக்குட்பட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களை வருடாந்த இட மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டாமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன், இன்று (24) தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வுக்கான வயது எல்லை, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 65ஆக நீடிக்கப்பட்டு, இது தொடர்பாக அரச நிர்வாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டு, அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 60 வயதை பூர்த்தி செய்த அலுவலர்களை இட மாற்றம் செய்யலாமென சுற்றறிக்கையில் தெரிவிக்கவில்லை. மேலும், தற்போது மிக இக்கட்டான காலகட்டத்தில் வாழ்க்கை செலவும் அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறான இடமாற்றத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதை நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் செய்ய முடியாமல் உள்ள நிலையில், அனேகமானவர்கள் நோயாளிகளாக உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இடமாற்றம் செய்வதை நிறுத்தி, அந்தந்த அலுவலகங்களில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago