Janu / 2025 ஜூலை 29 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளது.
இவ்வாறு, சிகிச்சை பெற்று வரும் நபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய கமால்தீன் என்பவர் எனும் தகவல் மாத்திரமே கிடைத்துள்ளது.
சுமார் 25 நாட்களுக்கு முன்னர் இந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் காணப்படும் இந்த நபர் பற்றிய தகவல் தெரியும் பட்சத்தில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பினை ஏற்படுத்துமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்

9 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Mar 2026