2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அனர்த்த அபாய குறைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

Janu   / 2024 மார்ச் 12 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த அபாயத்தினை குறைப்பதற்கு அரசாங்கத்தினால் அனர்த்த அபாய குறைப்பு வேலைத் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவில் அனர்த்த முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்த தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் , மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தலைமையில் திங்கட்கிழமை (11)   நடைபெற்ற போதே  அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அவர்  மேலும்  தெரிவிக்கையில்  , 

" அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் வினைத்திறனுடன் கொண்டு செல்வதற்காக சுமார் 300க்கும் மேற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் சகல பிரதேச செயலகங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலையான அபிவிருத்தியுடன் அனர்த்த குறைப்பு செயற்த்திட்டத்தினையும் முன்கொண்டு செல்ல கிராமங்கள் தோறும் அனர்த்த முகாமைத்துவ தொண்டர் குழுக்களை வழிப்படுத்துவதற்கான செயற்த்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்கள் தொடர்பாக முதலில் அதிகாரிகள் அறிந்திருந்தால்தான் மக்களுக்கு சரியான நேரத்தில் சரியான தகவல்களை வழங்க முடியும். அரசாங்க உத்தியோகத்தர்கள் அனர்த்தம் தொடர்பாக கிராம மட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அனர்த்தம் ஏற்பட கூடிய சூழ்நிலை உருவானால் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், நாம் ஒவ்வொருவரும் பிரதேசத்தின் அனர்த்த பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் " 
 என  தெரிவித்துள்ளார்.

 எம்.எஸ்.எம். ஹனீபா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X