2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் ஊடகவியலாளர் சந்திப்பு

Janu   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதர் அதிகாரிகள்  மட்டும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கிடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றது.

இதில் யாழ் துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீஸ் மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் தொடர்பிலும் இலங்கை இந்தியா உறவு தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வடகிழக்கு மக்களின் தாக்கம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகின்றது சிறுபான்மை இன கட்சிகள் மூலமாக களமிரக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் எவ்வாறான தாக்களை செலுத்தப்போகிறார் என்பது பற்றியும் இது சிறுபான்மை சமூகத்துக்கு சாதகமானதா ? பாதகமானதா ? போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. 

இலங்கை இந்திய தொடர்பில் அரசியல் ரீதியான உறவு சுற்றுலாத் துறை அபிவிருத்தி , ஊடகவியலாளர்களுக்கான எதிர்கால பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ் மக்களுடைய சமூக பொருளாதார பிரச்சினைகள் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர்பிலும் மேலும் விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது.

ஏ.எச் ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X