Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 04 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாட்டை இன மத பேதமற்ற முறையில் ஒன்றுபடுத்தி வளப்படுத்துவேன் என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நான் காலஞ்சென்ற ஜனாதிபதியின் மகன் என்ற வகையில் நாட்டைக் கட்டியெழுப்பும் உத்தரவாதத்தினை உங்களுக்கு வழங்குகிறேன் என்றும் கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு உட்பட சீரழிந்து கிடக்கும் நாட்டை சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இன மத பேதமின்றி நாட்டைகட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய காலம் கனிந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இளைய தலைமுறையை ஸ்மார்ட் டிஜிட்டல் கணனிப் பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக மாற்றுதல் எனும் எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவுக்கமைவாக டிஜிட்டல் கற்றல் வகுப்பறை, கணினிகள், ஆங்கில அகராதிகள் ஆகியவற்றைக் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு - ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் புதன்கிழமை (03) நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.மஹாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீரலி, எஸ். கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ஐக்கிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க. சிறிஸ்குமார், ஏறாவூர் நகர சபை முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சுமார் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான கணினி உபகரணங்கள் இங்கு மாணவர்களின் கற்றலுக்காக கையளிக்கப்பட்டதுடன் சர்வதேச மொழியான ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு தொகுதி ஆங்கில அகராதிகளும் கையளிக்கப்பட்டன.
இவ்வாண்டு முடிவடைவதற்குள் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலைகளை ஸ்மாட் பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தை ஆரம்பிக்வுள்ளதாகவும் ஸ்மாட் டிஜிட்டல் கணினி கற்றல் வசதிகளை ஏற்படுத்தித் கொடுக்கப்படும் , இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 360 பாடசாலைகள் வளமடையும் என்றும் அவரது உரையில் குறிப்பிட்டார் .
பேரின்பராஜா சபேஷ்
41 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago