2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இரு பொலிஸாருக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 07 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸார் உள்ளிட்ட 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து எழுந்தமானமாக கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி இன்று (07) மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன், பிசிஆர் பரிசோதனைகளில் ஏறாவூரில்  இரு பொலிஸார் உள்ளிட்ட மூவருக்கும், காத்தான்குடியில் 20 பேருக்கும், வெல்லாவெளியில் ஒருவருக்கும், மட்டக்களப்பில்  25 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 பேருக்கும், காத்தான்குடியில் 146 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X