2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

இறைச்சிக் கடைகளுக்கு நாளை பூட்டு

Janu   / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை(04)அன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் புதன்கிழமை(04)அன்று திறக்காமல் மூடிவிடுமாறு ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 அஸ்லம் எஸ்.மௌலானா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X