Editorial / 2025 மார்ச் 23 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு 16 வயது சிறுவன் சனிக்கிழமை (22) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த கண்ணகி கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ள நிலையில் நண்ரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளேன்.
சம்பவ தினம் நண்பனின் உழவு இயந்திரத்தில் நண்பர் உழுது கொண்டிருக்கும்போதே அருகில் இருந்தவர் தவறி வீழ்ந்து வயலை இரட்டிப்பாக்கும் கலப்பைக்குள் அகப்பட்டு நசுங்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உழவு இயந்திரத்தின் சாரதியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உழவு இயந்திரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


39 minute ago
46 minute ago
55 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
46 minute ago
55 minute ago
56 minute ago