2024 மே 07, செவ்வாய்க்கிழமை

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

Janu   / 2024 ஜனவரி 28 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறும். பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ.அப்துல் ஸமட் அறிவித்துள்ளார்.

பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் குறிப்பாக விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இந் நோய் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

எலிக்காய்ச்சலினால் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதோடு, கொதித்தாறிய நீரை பருகுமாறும் இது ​ தொடர்பில்  விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல்,தசைகளில் கடுமையான வலி,கண் விழி சிவப்பு நிறம் அடைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைவடைதல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் இந் நோயின் அறிகுறிகளாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.எம். ஹனீபா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X