2026 மே 14, வியாழக்கிழமை

dd

ஐஸூடன் ஐவர் கைது

Janu   / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாடி கிராமம் 01 பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது  2,055 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , மோட்டார் சைக்கிள்கள், மற்றும் கைத்தொலைபேசிகள்  என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த தேடுதல் நடவடிக்கை சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  கைதான சந்தேக நபர்கள்  மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள்  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .