Janu / 2025 ஜனவரி 29 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதரியா வீதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்குச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 370 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (29) அன்று ஆஜர்படுத்திய போது பெப்ரவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
றிபாஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .