Janu / 2025 ஜூலை 14 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடுவதாக சம்மாந்துறை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு சந்தேக நபர்கள் சோதனை செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த கையடக்க தொலைபேசியின் உட்பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
கைதான சந்தேக நபர்கள் சம்மாந்துறை புளக் ஜே 02 பகுதியைச் சேர்ந்த 28 வயது மற்றும் கல்லரிச்சல் 03 பகுதியைச் சேர்ந்த 19 வயது சந்தேக நபர்களாவர்.
இதன் போது ஒருவரிடமிருந்து 2 கிராம் 631 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட கையடக்க தொலைபேசி பணம் என்பன மீட்கப்பட்டதுடன் மற்றவரிடமிருந்து 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டன.
மேலும் சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்

13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Mar 2026
13 Mar 2026