Freelancer / 2023 ஜனவரி 19 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம் ஷினாஸ்
அதிகரித்துக் காணப்படும் போதைப்பொருள் பாவனையை முற்றாகத் தடுக்கும் வேலை திட்டத்தின் கீழ், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் நேற்று முன்தினம் (17) பிரான்ஸ் சிற்றி வீட்டுத் திட்டத்தில் உள்ள றையான் ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.
மருதமுனை பிரதேசத்தில் உள்ள 22 பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பெரியநீலாவனை விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி ஆர்.ஏ.சி.டி.ஏ ரத்நாயக்க, பெரியநீலாவனை பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களான ஏ.எம் நஸார், எம்.எல் நஜீம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு பொலிஸார் கருத்து தெரிவிக்கும் போது, போதைவஸ்து பாவனை, இப்போது கண்ணுக்குத் தெரியாத வகையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பொலிஸார் வருவதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக அவற்றை அருகில் தூக்கி வீசி விடுகிறார்கள்.
இந்நிலையில் அவர்களை கண்ட மாதிரி நாம் கைது செய்ய முடியாது. ஏனெனில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்வதன் ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டு இருப்பதாக குற்றம் சுமத்தி, எங்கள் மீதும் பழியை போடுகிறார்கள். இது ஒரு பாரிய சிக்கலாகும்.
எனவே சமூக மட்டத்தில் போதைப்பொருளை தடுப்பதற்கு அனைத்து பள்ளிவாசல்கள் சம்பளம், சிவில் சமூக அமைப்புகள், பொலிஸாருக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். போதைப்பொருள் பாவிப்பவர்கள் என அடையாளம் கண்டவர்களை புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சமூகம் சார்ந்த நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் பொலிஸார், அதிரடிப்படையினர், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் என எல்லோரும் ஒன்று இணைந்து விசேட வேலைத்திட்டங்களை தொடர்சியாக நடைமுறைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டன.

16 minute ago
42 minute ago
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
42 minute ago
53 minute ago
59 minute ago