2025 ஜூலை 16, புதன்கிழமை

கணவன் மனைவிக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 23 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலுமுதீன் கியாஸ் )

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (23) இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் திருமலை சுகாதார அதிகாரி அலுவலகத்தினால் ஆண்டிஜன் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்ட போது, அதில் கிண்ணியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட குட்டிக்கரா பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் தொற்றாளராக இனங்காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் தொற்றாளரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 21 நபர்களின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில்  பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த 2வது கொரோனா அலைக்குப் பின்னர்  மொத்தமாக 82  நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X