Janu / 2026 ஜனவரி 08 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஓட்டமாவடியிலுள்ள தோட்டத்துக்குள் வேலிகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்த யானைக்கூட்டம் காய்க்கும் தென்னை மரங்களை துவம்சம் செய்து சாப்பிட்டு நாசமாக்கியதுடன், பயன் தரும் மரங்களையும் அழித்துள்ளன .
பல மணி நேரம் அட்டகாசம் புரிந்த காட்டு யானைகள் அமீரலி விளையாட்டரங்கு மைதானத்தின் ஊடாக வேலியை உடைத்துக்கொண்டு வெளியேறி சேன்றுள்ளதுடன் தனித்துவிட்ட ஒரு யானை பிரதான பாதையை கடந்து அதன் இருப்பிடத்திற்கு சென்றுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
குறித்த யானைக்கூட்டமே காவத்தமுனை வாழ் மக்களையும் நீண்ட காலமாக அச்சுறுத்தி வருவதுடன் பயன் தரு தென்னை, வாழை, மா, பலா மரங்களையும் அழித்து, வீடுகள், மதில்கள், வேலிகள் போன்றவற்றையும் உடைத்து நாசமாக்கி வருகிறது.
பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வன இலாகா அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago