R.Tharaniya / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்புபோரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டைபகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்றுபிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய இராசதுரை ரஜீகரன் என்ற ஒருவரே இவ்வாறுகாட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகிய நிலையில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம்போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் மிக நீண்டகாரமாகவிருந்து இவ்வாறு காட்டு யானைகளின்தாக்குதல்களும், அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனினும் இதற்கு நிரந்தரதீர்வு முன் வைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
வ.சக்தி




13 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago