Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. சரவணன்
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார், கடந்த 22ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் எனவும் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், உடனடியாக 065-2056-936 என்ற கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய, சடாச்சரம் தேவலஷ்மி என்பவரே காணமால்போயுள்ளார். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில், தனது மகனுடன் வாழ்ந்துவந்துள்ளார். வியாழக்கிழமை (22) வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என இவரது மகன், செவ்வாய்க்கிழமை (27) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

32 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago