2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியைச் சேர்ந்தவர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது

Freelancer   / 2023 ஜனவரி 04 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன்  தொடர்பில்  இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர், நேற்று முன்தினம் (02) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர், டிசெம்பர் 29ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர். 

இந்த ஐ.எஸ் சந்தேகநபர்களுடன், காத்தான்குடியைச் சேர்ந்த உவர் லெப்பை அஹமட் நுஸ்கீன் என்பவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்ததாக,  இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து,  இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், பழைய கல்முனை வீதி, எம்.பி.சி.எஸ் குறுக்கு வீதியைச் சேர்ந்த  குறித்த நபரை, அவரது வீட்டில் வைத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டார் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X