Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மே 03 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை வளம்சேர் வாழையூர் கலைச் சங்கமத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'காரிகை கனவு' எனும் தொனிப் பொருளிலான கௌரவிப்பு நிகழ்வும், அழகுக்கலை நிகழ்வும் பேத்தாழை குகணேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வாழைச்சேனை வளம்சேர் வாழையூர் கலைச் சங்கமத்தின் தலைவர் திருமதி.ஜெயராணி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.கே.அமலினி, மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், பேத்தாழை விபுலானந்தா கல்லூரி அதிபர் எஸ்.முருகவேல், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரகுமார, வாழைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் ஜி.பி.பிரகாஸ், உடற்கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் கே.சுபாஸ்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago