Freelancer / 2023 ஜனவரி 27 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா. கிருஸ்ணா
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க குசனார்மலைக்கு, சுவிஸ் தூதுவர் டொமிங்க் பேர்கிலர் நேற்று முன்தினம் விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் செயலணி ஊடாக, தமிழர்களின் பாரம்பரிய இடங்களை, தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதற்கு முன்னெக்கும் செயற்பாடுகள் தொடர்பில், இரா.சாணக்கியன் எம்.பியால் தூதுவரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, இந்த விஜயம் அமைந்திருந்தது. .
குசனார்மலைக்கு வருகை தந்த தூதுவரை இரா.சாணக்கியன், ஆலய நிர்வாகத்தினர், கிராம மக்கள் வரவேற்றதுடன் மலையில் உள்ள முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தூதுவருக்கு ஆசியும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து குசனார்மலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அப்பகுதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. 
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago