Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
குச்சவெளி விவசாய காணிகளில் பிரவேசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (11) ஆம் திகதி, திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொண்ட போது மேற்கண்டவாறு இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.
இவ்வழக்கில் வழக்காளிகள் சார்பாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் பிரசாந்தினி உதயகுமார் ஆகியோர் ஆஜராகி இருந்தார்.
இதன் போது தொல்பொருள் திணைக்களம் சார்பாக ஆஜராகியவர்கள் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறும் விவசாயிகளை காணிகளுக்குள் செல்ல தடை செய்யுமாறு கோரியிருந்தார்கள்
எனினும், அதனை வழக்காளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை மேலும் தொல்பொருள் அடையாளங்கள் உள்ள இடத்தை தவிர ஏனைய இடங்களை விடுவிக்க தாம் தயாராக இருப்பதாக அரச தரப்பினர் கூறினர்.
அதற்கு இனங்க இந்த இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கின் போது ஆராயப்படும் என காணி உரிமையாளர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago