2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கொவிட்-19 பிரிவிற்கு கட்டில்கள் கையளிப்பு

Freelancer   / 2021 ஜூன் 12 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவிற்கு, நோயாளிகள் கட்டில்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறியிலாளர் சங்கத்தின், மட்டக்களப்பு கிளையினால் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பத்து நோயாளிகள் கட்டில்கள் கையளிக்கப்பட்டது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் பி.கேதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் தகவல் பிரிவு பொறுப்பாளர் வைத்தியர் இ.நவலோஜிதன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறியிலாளர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் பொறியியலாளர் ரி.பத்மராஜா, பொறியியலாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிப்பதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

M

கிண்ணியா, மூதூர்

கொவிட் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தில், நிவாரண பணிகளை முன்னெடுத்துவரும் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், இன்று (12) கிண்ணியா, மூதூர் தள வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒரு தொகை கட்டில்களை, வைத்தியசாலை அத்தியட்சகர்களான டாக்டர் ஏ.எம்.எம். ஜிப்ரி மற்றும் டாக்டர். கயல்விழியிடம் கையளித்தார். ஹஸ்பர் ஏ ஹலீம்

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .