Editorial / 2026 மே 15 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராஜா சரவணன்
மட்டக்களப்பு நகரில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் இயங்கிவந்த உணவகம் ஒன்றுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அதனை 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்குமாறும் வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டது.
மட்டக்களப்பு பொது சுகாதாரப் பரிசோதகர்கள் குறித்த உணவகத்தை முற்றுகையிட்டு சோதனை செய்தபோது, அங்கு மனிதப் பயன்பாட்டிற்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவக உரிமையாளருக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
பொது சுகாதாரப் பரிசோதகர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை.
உணவு உற்பத்தி செய்யும் இடங்களில் பூச்சிகள் மற்றும் பீடைகளின் தொற்று காணப்பட்டமை.
உணவுடன் நேரடியாகத் தொடர்புபடும் மேற்பரப்புகள் நோய் பரவக்கூடிய வகையில் அசுத்தமாகக் காணப்பட்டமை.
மலசலகூடத்திற்கு முன்னால் உள்ள பகுதியில் உணவு உற்பத்தி செய்யப்பட்டமை.
திண்ம, திரவ மற்றும் வாயுக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த முடியாத சூழலில் உணவு உற்பத்தி இடம்பெற்றமை.
குறிப்பாக, இந்த உணவக உரிமையாளருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், உரிமையாளரை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டதுடன், உணவகத்தை 14 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடி சீல் வைக்குமாறும் கட்டளையிட்டார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து, பொது சுகாதாரப் பரிசோதகர்களான பி. மிதுனன்ராஜ், கே. யசோதரன், ஆர். இன்பராசா ஆகியோர் குறித்த உணவகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.




22 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago