Freelancer / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு நேற்று முன்தினம்(9) விஜயம் செய்தார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அரச அதிபரை வரவேற்றார். அத்துடன் பல கோடி ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ் விஜயத்தின்போது திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் வாழும் 75 பேருக்கு காணி அளிப்பு பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
சமூர்த்தி பயனாளிகளுக்கு ஒருவருக்கு 10லட்சம் ரூபாய்வீதம் 10பேருக்கு 10மில்லியன் ரூபாய் ( 2 கோடி ருபாய்) வழங்கப்பட்டது. மேலும் சமூர்த்தி திணைக்களத்தினால் சமூர்த்தி பயனாளிகுடும்பங்களைசேர்ந்த 343 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் உலர்மிளகாய் உற்பத்தி செய்வதற்காக தங்கவேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த 05 பயனாளிகளுக்கு நீர் பம்பிகள் வழங்கி வைக்கப்பட்டன ..
வி.ரி.சகாதேவராஜா




2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago