Freelancer / 2023 ஜனவரி 27 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2023ஆம் ஆண்டுக்கான விவசாய குழுக் கூட்டம், அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (25) நடைபெற்றது.
சிறுபோகத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படும் இச்சந்தர்ப்பத்தில், பெரும்போக விவசாயத்தின் முன்னேற்ற அறிக்கையையும் விவசாயிகள் எதிர்கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும், நெற்செய்கைக்கான செலவு மதிப்பீடு, சிறுபோக பயிர்ச்செய்கைக்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள், நெல்லுக்கான விலை நிர்ணயம் போன்றவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
பெரும்போகத்தின் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்களையே சிறுபோக விவசாயத்துக்கும் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுபோகத்துக்கான விதை நெல்லை, மார்ச் முதலாம் திகதியிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பத்திநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர் குமாரசிறி, கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. ஜெகன்நாத் ,பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ. பேரின்பராஜா, மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என். நாகரெத்தினம், பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago