Freelancer / 2023 ஜனவரி 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ் ஷாபி
கிண்ணியா, சின்னமகாமாறு பிரதேசத்தில், கத்தியால் தாறுமாறாக வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இருவர் கிண்ணியா தள வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தாயான காஞ்சா உம்மா (வயது 38), இரண்டு பிள்ளைகளின் தந்தையான கபூர் பவுசூர் (வயது 28 ) ஆகியோரே இவ்வாறு வெட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: நேற்று (26) காலை ஒன்பது மணியளவில், தனது பக்கத்து வீட்டில் உள்ள கபூர் பவுசூர் என்பவர், தன்னைத்தானே கத்தியால் வெட்டுவதற்கு முயன்றபோது, அதை அவதானித்துக் கொண்டிருந்த காஞ்சா உம்மா, ஓடிச் சென்று அதை தடுக்க முற்பட்ட வேளையில், அவரையும் அந்த நபர் கத்தியால் தாறுமாறாக வெட்டியதாகவும் அதன் பின்னர் தனது கழுத்தை தானே வெட்டிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெட்டிய நபர் ஒரு மனநோயாளி என்றும் அவர் சில நேரங்களில் கத்தியை கையில் வைத்துக்கொண்டு, தன்னைத் தானே வெட்டுவதற்கு முயல்பவர் என்றும் தெரிய வருகின்றது.
சம்பவம் குறித்து, கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago