Janu / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 27 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையில் 52 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் வைத்தியர்கள் இணைந்து குறித்த பாரிய சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி,காத்தான்குடி, பட்டிப்படை, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் தலைமையில் ஐந்து பிரிவுகளாக மேற்படி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன
இதன்போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 72 உணவகங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 27 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்
சுற்றிவளைப் பின் போது பெருமளவு மனித பாவனைக்குதவாத நுகர்வுக்கு பொருத்தமற்ற சமைத்த மற்றும் பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவைகள் அழிக்கப்படவுள்ளதாகவும் சுகாதார துறையினர் மேலும் தெரிவித்தனர்
ரீ.எல்.ஜவ்பர்கான்


7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago