Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 8 இலட்சம் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திக்கும் மேல் பெறுமதி வாய்ந்த "Bajaj pulsar Ns 200" என்ற வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸாரால் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து குறித்த மோட்டார் சைக்கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்டுள்ளதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்

3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago