Freelancer / 2023 ஜனவரி 26 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தால் (PCA), நல்லிணக்கத்துக்காக சிவில், சமூக தலைமைத்தும் மிக்க பெண்களை அடையாளப்படுத்தி, வலுவூட்டும் நிகழ்வு, கல்முனை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
சிவில் சமூக அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில், கடந்த காலங்களில் தங்களின் வகிபாகம் எவ்வாறு காணப்பட்டது? தற்காலத்தில் சிவில் சமூகத்தின் வகிபாகம் எவ்வாறு காணப்பட வேண்டும் என்ற விடயமும் கல்முனை பிரதேசத்தில் நல்லிணக்கத்துக்கு சவாலாக காணப்படுகின்ற விடயங்களை அடையாளம் கண்டு, எவ்வாறு எதிர்காலத்தில் அவற்றுக்கான சமூக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது .
கல்முனை பிரதேச நல்லிணக்கக்குழு மற்றும் அம்பாரை மாவட்ட நல்லிணக்ககுழு இணைப்பாளர் எஸ்.எல் அப்துல் அஸீஸின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில், சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் டி. ராஜேந்திரன், அரச சார்பாற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.எல்.எம் இர்பான், நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்களான கே.ட .ரோகினி, எம்.எல்.ஏ மாஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago