2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

தேக்கு மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்லாயிரம் ரூபாய்  பெறுமதியுடைய தேக்கு மரக்குற்றிகளை  சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற   தகவலுக்கமைய வங்களாவடி பிரதேசத்தில்   திங்கட்கிழமை(29)  மேற்கொள்ளப்பட்ட   சோதனை நடவடிக்கையின் போது குறித்த தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை விளினியடி 02 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையர்வர் என தெரியவருகிறது.

மேலும் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் உட்பட்  சந்தேக நபர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X