Freelancer / 2023 ஜனவரி 19 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
உள்ளூராட்சித் தேர்தல் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.வீ.எம் சூபியான் தலைமையில் நேற்று முன்தினம் (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூப ரஞ்சினி முகுந்தன், மட்டக்களப்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.யு சரத் குமார, மட்டக்களப்பு மாவட்ட முதலாம் பிரிவிற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஆர் குமாரசிறி எனப் பலர் பங்குபற்றியிருந்தனர்.

7 minute ago
33 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
44 minute ago
50 minute ago