2024 மே 01, புதன்கிழமை

“தொலைபேசி பாவனையை குறையுங்கள்”

Janu   / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு பாடத்திற்கு நான்கு இடங்களில் டியூஷன் செல்வதால் எந்த பிரயோசனமும் இல்லை என்றும் சுயகற்றல் (self learning) ஒன்றே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் எனவும் தவநாயகம் மதிவேந்தன்  தெரிவித்துள்ளார்.

ரக்ஸ் மற்றும் அஸ்கோ அமைப்பின் செயலாளர் ச.நந்தகுமார் தலைமையில், வருடாந்த கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை  (03)   நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உயர்தரம் கற்கும் காலத்தில் ஒரு நாளைக்கு நான்கு  மணித்தியாலங்கள் கட்டாயம் சுயகற்றலில் ஈடுபடவேண்டும்.

சுயகற்றல் ஒன்றே வெற்றியைத் தரும். குறிப்பாக ஆசிரியர் கைநூலை படியுங்கள். அதிலுள்ள விடைகளைத்தவிர வேறொன்றுமில்லை. காரைதீவில் இம் முறை 37 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள். இங்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெறுகிது அடுத்தமுறை இந்த எண்ணிக்கை ஐம்பதாக வேண்டும்.முடியுமானவரை தொலைபேசி பாவனையை குறையுங்கள். அப்பொழுது முன்னேறலாம்”  என தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கு மூன்று ஏ பெற்ற ஐந்து மாணவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசும் அடுத்த கட்ட பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் ஏனையோருக்கு பதக்கமும் வழங்கி கௌரவிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X