Janu / 2024 மார்ச் 24 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மார்ச் 24 ஆம் திகதி சர்வதேச காச நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் சனிக்கிழமை (23) சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது .
இந் நிகழ்வு "ஆம் எம்மால் காச நோயை இல்லாதொழிக்க முடியும்" எனும் தொனிப்பொருளில் பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக ஆரம்பித்த நடைபவனி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வரை சென்று வைத்தியசாலையில் விழிப்புணர்வு கருத்தரங்கொன்றும் இடம்பெற்றுள்ளது . இதன்போது காசநோய் தொடர்பாகவும் அதற்கான அறிகுறிகள், அதிலிருந்து பாதுகாப்பு பெறுதல், சமூகத்தில் காசநோயை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது .
றியாஸ் ஆதம்
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025