2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நித்திரையில் இருந்த 5 வயது சிறுவன் கடத்தல்

Editorial   / 2024 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

 கனகராசா சரவணன்

வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரன் ஒருவன் கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற குழந்தையை மீட்டதுடன் கடத்தல் காரணை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம்   மட்டக்களப்பு  வாகரை பிரதேசத்தில் சனிக்கிழமை (17) அதிகாலையில் இடம் பெற்றுள்ளதுடன் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்

வாகரை 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயதுடைய மோகன் கீர்த்தி என்ற குழந்தை தாய் தந்தையுடன்  நித்திரையில் இருந்த நிலையில் சம்பவம் தினமான சனிக்கிழமை (17) அதிகாலை 3.30 மணியளவில் குறித்த  குழந்தை பால் கேட்டதை அடுத்து  தயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை படுக்க வைத்துவிட்டு சமையலறைக்கு சென்று பால் போத்தலுடன் திரும்பி வந்தபோது நித்திரையில்  இருந்த குழந்தையை காணாததை அடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு குழந்தையை தேடினர்.

இதன் போது குழந்தையை கடத்தல் காரன் ஒருவர் கடத்திக் கொண்டு காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடிய நிலையில் குழந்தையை காட்டில் விட்டுவிட்டு கடத்தல் காரன் அந்த பகுதியில் ஒளிந்திருந்த நிலையில் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் குழந்தையை மீட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் கைது செய்யப்பட்ட கடத்தல்காரன் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவன் எனவும் போதை பொருளுக்கு அடிமையானவன் எனவும் பல திருட்டு சம்பவங்களில்  தொடர்புபட்டவன் என்பதுடன் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்ட (.ஆர்.சி) எனும் போதை பொருள் வாங்க பணத்திற்காக குழந்தையை கடத்தி கப்பம் பெற இருந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 23 ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X