Ilango Bharathy / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். எஸ். எம்.நூர்தீன்
“மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்களுக்கு காணிப் பிரச்சினை இருக்கின்றது” என்பதை ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகிய இருவரும் விவாதமொன்றுக்குச் சென்று தான் நிரூபிக்க வேண்டும் என்ற எவ்விதத் தேவையும் முஸ்லிம்களுக்குக் கிடையாது என காத்தான்குடி நகரசபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏம்.சபீல் நழீமி தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இது தேசியத்திலும் சர்வதேசத்திலும் அறியப்பட்ட தெளிவான விடயம். இவ்வாறான விவாதம் இம் மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்களின் சிபாரிசுகளை அமுல்படுத்தினால் போதும்” என்றார்.
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago