2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

“நீரிழிவு நோயின் தாக்கம் பாரதூரமானது”

Freelancer   / 2022 நவம்பர் 21 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். எம் நூர்தீன்

2021ஆம் ஆண்டில் மட்டும் 6.7 மில்லியன் மக்கள்,  நீரிழிவு நோயால் உலகில் உயிரிழந்துள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் குடும்ப நல பொது வைத்தியருமான டொக்டர் கே. அருளானந்தம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் லயன்ஸ் கழகங்களின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (19) நடைபெற்ற ‘நீரிழிவு நோயை ஒழிப்போம் நலமுடன் வாழ்வோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நடைபவனியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  உலகில் 537 மில்லியன் பே நீரிழிவு நோயாளர்களாக இனம்  காணப்பட்டுள்ளார்கள்.  2030 ஆண்டில் 643 மில்லியன் மக்கள், இந்த நோய்க்கு ஆளாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1980ஆம் ஆண்டு  108 மில்லியனாக இந்த நோயாளர்கள்  காணப்பட்டனர். நீரிழிவு  நோய் கூடிக் கொண்டு செல்கின்ற ஒரு நோயாகும். இந்த நோயை கட்டுப்படுத்துகின்ற போது, நிச்சயம் இதைக் குறைக்க முடியும்.

இந்த நோயின் தாக்கம் மிகவும் பாரதூரமானது. பாரிசவாதம், மாரடைப்பு,  சிறு நீரகம் இழப்பு,  கண் பார்வை இழப்பு, கால் இழப்பு போன்ற தாக்கங்களை ஏற்படுத்தும் என மேலும் தெரிவித்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .